வாடிக்கையாளர்களை இழக்கப்போகிறதா வோடபோன் நிறுவனம் …!சரியான நெட்ஒர்க் இல்லை ,இணைய சேவை இல்லை …!அதிர்ச்சியடையும் வாடிக்கையாளர்கள் …!
கடந்த சில வாரங்களாக வோடபோன் நெட்ஒர்க்கில் தொலைபேசி அழைப்புகள் சரியாக செல்லவில்லை என்று வாடிக்கையாளர்கள் புகார் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் கடன் நெருக்கடி காரணமாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் தேசிய கடன் தீர்ப்பாயத்தில் திவால் மனுத் தாக்கல் செய்தது. இதை அந்த தீர்ப்பாயமும் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கு நிறுவனமான டிராய் கால அவகாசம் அளித்தது.
இதில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் செல்போன் எண்ணை போர்டல் முறையில் பிஎஸ்என்எல், ஏர்டெல்,வோடோபோன் நிறுவனத்துக்கும் மாறினனார்கள்.
ஆனால் கடந்த சில வாரங்களாக வோடபோன் நெட்ஒர்க்கில் தொலைபேசி அழைப்புகள் சரியாக செல்லவில்லை, குறுஞ்செய்திகள் செல்லவில்லை, இணைய சேவை வரவில்லை,அதுவும் 4g,3g இணைய சேவை அதேபோல் வோடபோன் கேர்க்கு இது தொடர்பாக கால் செய்தாலும் அதிகாரிகள் யாரும் பேசுவதில்லை.
மாறாக கணினி பேச்சு மட்டும் தான்.இது தொடர்பாக சமீபத்தில் வாடிக்கையாளர் ஒருவர் கால் செய்துள்ளார் சுமார் 47 நிமிடங்கள் மற்றும் 32 வினாடிகள் கணினி பேச்சு மட்டும் இருந்துள்ளது.இதனால் ஆவேசம் அடைந்த அவர் வோடோபோன் நிறுவனத்துக்கு தனது போன் அழைப்பை ஸ்கிரீன் சார்ட் எடுத்து ட்விட்டர் மூலம் அனுப்பியுள்ளார்.இதனால் வோடோபோன் வாடிக்கையாளர்கள் சமீப காலமாக அந்த நிறுவனத்தின் மீது வெறுப்பில் உள்ளனர்.அது மட்டும் அல்லாமல் ஒரு சிலர் வேறு நிறுவனத்திற்கும் மாறி வருகின்றனர்.