வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது.! நவீன் பட்நாயக் திட்டவட்டம்.!

Published by
மணிகண்டன்

ஒடிசா: தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவரும், ஒடிசா ஆளும் அரசியல் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வருபவருமான வி.கே.பாண்டியனை தனது அரசியல் வாரிசு இல்லை என நவீன் பட்நாயக் ANI செய்தி நிறுவன பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் 2000ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சி தலைவர் நவீன் பட்நாயக் 5 முறை தொடர்ந்து முதலைவராக பொறுப்பில் இருக்கிறார். ஒடிசா சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தொகுதிககளுக்கான என இரு தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. 3 கட்ட தேர்தல் நிறைவுற்ற நிலையில் வரும் ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஒடிசா ஆளும் அரசை எதிர்த்து விமர்சனம் செய்ய எதிர்க்கட்சிகள் உபயோகிக்கும் முக்கிய பெயர் வி.கே.பாண்டியன், தமிழகத்தை பூர்வீமாக கொண்ட வி.கே.பாண்டியன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாவார். தற்போது ஒடிசா அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்கு உரியவராக மாறியுள்ளார். முதலமைச்சரின் பொறுப்பில் இருக்கும் முக்கிய செயல்திட்டதுறை (5T) இவரது கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. அதனால் வி.கே.பாண்டியன் தான் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என எதிர்க்கட்சிகள் வசைபாடி வருகின்றனர்.

இந்த விமர்சனங்கள் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த நவீன் பட்நாயக், தற்போது முதன் முதலாக கருத்து தெரிவித்துள்ளார். ANI செய்தி நிறுவனத்திடம் நவீன் பட்நாயக் பேட்டி அளிக்கையில் அவர் கூறுகையில், வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. இது அபத்தமான விமர்சனம். நான் முன்பு இருந்தே இது பற்றி அடிக்கடி கூறி வருகிறேன். இது பழைய குற்றச்சாட்டு. அதில் எந்த உண்மையும் இல்லை என குறிப்பிட்டார்.

மேலும், பாண்டியனை எனது அரசியல் வாரிசாக சுற்றி வரும் பேச்சுக்கள் அனைத்தும் மிகைப்படுத்திய பேச்சுக்கள். இந்த விமர்சனங்கள் எப்படி வருகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த கருத்தை முன்வைக்கும் பாஜக, அதிக விரக்திமடைந்து உள்ளது. பாஜகவின் புகழ் ஏற்கனவே குறைந்து வருகிறது. தற்போது அவர்கள் மீது  மக்களுக்கு மேலும், அவநம்பிக்கை உருவாகி வருகிறது.

நான் கடந்த 27 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எனக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பு கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது, நான் அதை சிறப்பாக நடத்தி வருகிறேன் என்று நினைக்கிறேன் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

4 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

5 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

5 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

6 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

6 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

7 hours ago