பூர்வீகம் தமிழ்நாடு.. அரசியல் பிரவேசம் ஒடிசா.! ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனின் அடுத்த நகர்வு.!
தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன், 2000ஆம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்து, அதன் பின்னர் பல்வேறு குடிமை பணிகள் நிறைவு செய்து 2011ஆம் ஆண்டு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிப்பட்ட செயலாளாராக பணியாற்ற துவங்கினார். அப்போது முதலே முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருங்கிய அரசு அதிகாரியாக மாறினார்.
விரைவில் தனது அரசு பதவியை ராஜினாமா செய்து ஒடிசாவில்ஆளும் பிஜேடி-யிடம் சேருவார் என கூறப்பட்டது. அதற்கேற்றாற்போல , ஒடிசாவில் அனைத்து தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று அங்கு மக்கள் நலத்திட்டங்கள் சரியாக செயல்படுத்தபடுகிறதா என கள ஆய்வு மேற்கொண்டு வந்தார். எதிர்பார்த்தது போலவே, கடந்த மாதம் (அக்டோபர்) 23ஆம் தேதி தனது ஐஏஎஸ் பதவியை வி.கே.பாண்டியன் ராஜினாமா செய்தார்.
இந்தியா முழுக்க கோலாகலமாக கொண்டாடப்படும் 554வது குரு நானக் ஜெயந்தி விழா.!
ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த பிறகு, அமைச்சர் அந்தஸ்து கொண்ட ஒடிசா அரசாங்கத்தின் விஷன் 5T செயல்திட்டத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்பு தலைவராக வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று புவனேஷ்வரில் உள்ள பிஜு ஜனதா தள கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில், வி.கே.பாண்டியன் தன்னை பிஜேடியில் இணைத்துக்கொண்டார்.
23 வருட ஐஏஎஸ் அனுபவமுள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வி.கார்த்திகேய பாண்டியன், ஒடிசாவில் கடந்த 23 ஆண்டுளாக ஆட்சி செய்து வரும் பிஜு ஜனதா தள கட்சியில், முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்து புதிய தலைவராகவும் மாற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் ஒடிசா அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.