அரசின் திட்டங்கள் எம்பிக்கள் போஸ்டர் ஓட்டுவதற்கு பயன்பட கூடாது.! பிரதமர் மோடி பேச்சு.!

PM Modi says about Vixit Bharat Sankalp Yatra

கடந்த 9 வருட பாஜக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நல திட்டங்கள் குறித்து இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை எனும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி அன்று ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் இருந்து துவங்கி வைத்தார்.

இந்த திட்டம் மூலம் பயனடைந்தவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக கலந்துரையாடினர். அப்போது பல்வேறு கருத்துக்களை பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி காணொளியில் குறிப்பிடுகையில், அரசின் திட்டங்கள் என்பது எம்பிக்கள் விளம்பரப்படுத்தி கொள்வதற்கு அல்ல. என்னை பொறுத்தவரை அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அடித்தட்டு மக்களை சென்றடைய வேண்டும் என்பதே இந்த யாத்திரையின் பின்னால் உள்ள எனது நோக்கம். எங்கள் திட்டங்களால் ஏற்கனவே பயனடைந்தவர்களின் அனுபவங்களைப் பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வதும், மேலும் யாரெல்லாம் புதியதாக சேர்க்கப்பட வேண்டும் என்பதை அறிவதே இதன் நோக்கமாகும். இந்த மோடியின் உத்தரவாதத்தால் அனைவரும் பயனடைய வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவில் உள்ள முந்தைய அரசாங்கங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் என்பது கொடுக்கும் வாக்குகளளானது, அந்த தொகுதி வாக்கு வங்கியை மட்டுமே மைய்யப்படுத்தியே அமைந்து இருக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நாட்டில் ஜன் ஔஷதி கேந்திராஎனும் அரசு மலிவு விலை மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், “மருந்துகளுக்கான செலவு முன்பு ரூ/12,000 முதல் 13,000ஆக இருந்தது. இப்போது ஜன் ஔஷதி கேந்திரா மருந்தகம் மூலம் ரூ.2000 முதல் 3000ஆக குறைந்துள்ளது. அதாவது மக்கள் ரூ.10,000 வரை சேமிக்கிறீர்கள். என்று பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்