ஜெர்மனியில் தவித்து வரும் விஸ்வநாதன் ஆனந்த்.! எப்போது வீடு திரும்புவார் என எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பத்தார்.!
ஜெர்மனியில் செஸ் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பொதுமுடக்கத்தால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி நாட்டில் பண்டஸ்லீகா செஸ் தொடர் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மன் சென்றார். அதன் பிறகு பிப்ரவரி மாத இறுதியில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தீவிரம் அடைந்தது.
பொதுமுடக்கத்தால் ஐரோப்பிய நாடுகளில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனியில் சிக்கி கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி கூறுகையில், ‘ விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கிறார். இந்தியாவில் இருந்து சிறப்பு விமானம் எப்போது அனுப்பபடும் என காத்துக்கொண்டிருக்கிறோம். விரைவில் அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம். எங்களது மகன் அகில் அவரை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறான்.’ என தெரிவித்தார்.