விக்கிப்பீடியாவை போல, “நித்தியானந்தாபீடியா” வலைத்தளத்தை உருவாக்கியுள்ள சாமியார் நித்தியானந்தா!
தன்னை பற்றி அறிந்து கொள்ள “நித்தியானந்தாபீடியா” என்ற வலைத்தளத்தை உருவாகியுள்ளதாகவும், அதில் தாங்கள் என்ன செய்துள்ளோம் என்பதை காண்க என தெரிவித்துள்ளார்.
சாமியார் நித்தியானந்தா, கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.
இதனையடுத்து, அவர் கைலாசா என்றொரு தனி நாட்டை உருவாக்கி, அதற்கென பிரதேய்க பாஸ்போர்டையும் உருவாக்கினார். தற்பொழுது கைலாசா எங்கு உள்ளது? என பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில், அதனை கண்டுபிடிக்க காவல்துறையினரே திணறி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, தினமும் ஒரு வீடீயோவை வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் நித்தியானந்தா. மேலும், வரும் விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி மற்றும் பணம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, 300 பக்க பொருளாதர கொள்கையும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நித்தியானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னை பற்றி அறிந்து கொள்ள “நித்தியானந்தாபீடியா” என்ற வலைத்தளத்தை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர், அபியுஸிவ் வீடியோ போடறவுங்க, மீம்ஸ் போடுற மாம்ஸு என எல்லாரும் நித்தியானந்தாபீடியா வலைத்தளத்தில் போயி, நாங்க என்ன பண்ணிருக்கோம்-னு போயி பாருங்க என தெரிவித்த அவர், அவரை பிச்சசோறுன்னு சொன்னாலும் பிரச்சனை இல்லையெனவும், எச்ச சோறுன்னு சொன்னாழும், அதிபர் சொன்னாலும் பிரச்சனை இல்லை என கூறினார்.
மேலும், தன்னை ஆண்டி என சொன்னாலும், அரசன் என சொன்னாலும் பிரச்சனை இல்லையென கூறிய அவர், கட்டாயமாக கைலாசாவின் அதிபர் என என்னை நானே சொல்லிக்கிறமாட்டேன் எனவும், பரமசிவ பரம்பொருள் தான் அதிபர் எனவும், அவருடைய காலுக்கு கீழ் தான் நான் உட்காந்திருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.