விசாகப்பட்டினம்: ராட்சத கிரேன் விழுந்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 11ஆக உயர்வு.!
ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நகரில் இன்று ஒரு பெரிய கிரேன் இடிந்து விழுந்ததில் 11 பேர் மரணம் மற்றும் ஒருவர் காயம் என தகவல்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் 60 அடி ராட்சத கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அங்கு 20 தொழிலாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் மதியம் 3 மணி அளவில் 10 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் இடிபாடுகளின் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
#UPDATE: The death toll in the crane collapse incident at Hindustan Shipyard Limited rises to 11: Visakhapatnam District Collector Vinay Chand #AndhraPradesh https://t.co/fDaFLqSPZA
— ANI (@ANI) August 1, 2020
இந்த சம்பவம் குறித்து பேசிய விசாக் மாவட்ட ஆட்சியர் வினய் சந்த் கூறுகையில்,”நாங்கள் இந்துஸ்தான் கப்பல் கட்டடத்தினரிடமிருந்தும், நிர்வாகத்தின் உயர் மட்டக் குழுவிலிருந்தும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
ஏற்க்கனவே எல்ஜி பாலிமர்ஸில் எரிவாயு கசிவு ஏற்பட்டு 12 மரணத்திற்கு வழிவகுத்த இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து துறைமுக நகரத்தில் மூன்றாவது பெரிய விபத்து இந்த சம்பவம் ஆகும்.