நாளை இந்திய பிரதமர் மற்றும் வங்கதேச பிரதமர் இடையே உச்சி மாநாடு
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் உச்சி மாநாடு நாளை நடைபெற உள்ளது.
இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும்,கொரோனாவிற்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் உச்சி மாநாட்டில் விரிவாக விவாதிக்க உள்ளனர்.
இந்தியாவும், வங்கதேசமும் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன.கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபரில், பிரதமர் ஷேக் ஹசினா அலுவலகப் பயணமாக இந்தியா வந்தார். 2020 மார்ச்சில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முஜிப் பார்ஷோ–வின் போது பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி செய்தி ஒன்றை அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.