பிரிக்ஸ் மாநாடு : எல்லை பிரச்சினைக்கு பிறகு இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் பங்கேற்பு

Default Image

இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை நிலவி வரும் நிலையில், இன்று நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் பங்குபெறும் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளாக பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது.உறுப்பு நாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் நடப்பாண்டிற்கான 12-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று (நவம்பர் 17-ஆம் தேதி )நடைபெறுகிறது.காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த மாநாடு, ரஷ்யா தலைமையில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார்.இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.மேலும் இந்த மாநாட்டில்,தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ,பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ( Jair Bolsonaro),சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.ஐந்து நாடுகளின் தலைவர்கள் பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், சுகாதாரம், எரிசக்தி மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை ஈடுசெய்யும் வழிகளில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், ஐந்து மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது.குறிப்பாக கடந்த ஜூன் 15-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.எனவே எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளின் அமைதி பேச்சு, பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன.இதனிடையே இன்று நடைபெறும் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.மேலும் எல்லை பிரச்சினை நடத்த பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் முதன்முறையாக மாநாட்டில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்