மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார்
17-வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திரகுமார் பதவி ஏற்றார்.
இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.மேலும் மத்திய அமைச்சரவை குழுவும் பதவியேற்றது. அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டன.
எனவே மக்களவைக்கு புதிதாக சபாநாயகரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.இன்று (17 ஆம் தேதி) மக்களவை கூட உள்ளது.
இதனால் மக்களைவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திரகுமார் நியமனம் செய்யப்பட்டார்.இந்நிலையில் 17-வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திரகுமார் பதவி ஏற்றார்.டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரேந்திரகுமாருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். புதிய எம்.பிக்களுக்கு வீரேந்திரகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.