பெங்களூரு கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க உதவிய ‘கிங் கோலி’.! பின்ணணி இதோ….
பெங்களூருவில் கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க விராட் கோலி போஸ்டர் உதவியுள்ளது.
பெங்களூருவில், மகாலட்சுமி நகர் பகுதியில் வசித்து வந்த 82 வயதான கமலா எனும் மூதாட்டி சில தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார். மூதாட்டி கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.
அப்போது சிசிடிவி கேமிரா ஆய்வு செய்த போது நம்பர் பிளேட் இல்லாமல் ஓர் ஆட்டோ சந்தேகப்படுபடியாக இருந்துள்ளது. அதனை பார்த்த போலீசார் அந்த ஆட்டோவில் கிங் கோலி என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி புகைப்படம் ஒட்டப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை கொண்டு ஆட்டோவை கண்டுபிடித்து கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தங்களது கடன்களை அடைப்பதற்க, சித்தராஜு, அசோக், அஞ்சனாமூர்த்தி ஆகியோர் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட கமலா எனும் மூதாட்டி வீட்டிற்கு பிளம்பிங் வேலை செய்ய அசோக் சென்று, மூதாட்டி தனியாக இருப்பதை மற்ற இருவரிடமும் கூறி திட்டம் தீட்டி உள்ளார்.
அதன் பிறகு அஞ்சனாமூர்த்தி ஆட்டோ நம்பர் பிளேட்டை அகற்றியுள்ளார். சம்பவத்தன்று, மூவரும் சேர்ந்து மூட்டையை கொலை செய்து அங்குள்ள நகைகளை திருடி சென்றுள்ளனர். இறுதியில் அவர்கள் ஆட்டோவில் ஒட்டியுள்ள விராட் கோலி புகைப்படம் அவர்களை அடையாளம் கண்டுபிடித்து கொடுத்துவிட்டது என பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.