டெல்லி:நாட்டின் 72 ஆவது குடியரசு தினத்தன்று இதுவரை இல்லாத வகையில் குழப்பம் மற்றும் வன்முறை காட்சிகளை டெல்லி கண்டது – நகரத்தின் எல்லைகளைச் சுற்றி அமைதியான டிராக்டர் பேரணியாக இருக்க வேண்டிய சமயத்தில் மையத்தின் விவசாய சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளுக்கும் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
செய்தி நிறுவனமான ANI தனது ட்விட்டர் தனது பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், போலீஸ் மற்றும் துணை ராணுவ வீரர்கள் செங்கோட்டை வளாகத்தில் 15 அடி சுவரிலிருந்து குதித்து தப்பித்து ஓடுவதுபோல் வீடியோ அமைந்துள்ளது.இதில் போராட்டக்கார்கள் தங்கள் கையில் உள்ள கம்பை வைத்து தாக்குவது,டிராக்டரை கொண்டு தடுப்புகளை இடிப்பது போன்ற காட்சிகள் அமைந்துள்ளது.
நேற்று நடைபெற்ற வன்முறையில் 86 காவல்துறையினர் காயமுற்றதாகவும் இதில் 41 பேர் செங்கோட்டையில் நடந்த வன்முறையில் தாக்கப்பட்டதாக காவல்துறையின் மூத்த அதிகாரி அதெரிவித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து,அமைதியை மீட்டெடுப்பதற்கும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும் டெல்லியில் கூடுதலாக துணை ராணுவ வீரர்கள் நிறுத்தபட்டுள்ளனர்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…