டெல்லி செங்கோட்டையின் 15 அடி பள்ளத்தில் குதித்து தப்பித்து ஓடும் போலீசார் வைரல் வீடியோ

Default Image

டெல்லி:நாட்டின் 72 ஆவது குடியரசு தினத்தன்று இதுவரை இல்லாத வகையில் குழப்பம் மற்றும் வன்முறை காட்சிகளை டெல்லி கண்டது – நகரத்தின் எல்லைகளைச் சுற்றி அமைதியான டிராக்டர் பேரணியாக இருக்க வேண்டிய சமயத்தில் மையத்தின் விவசாய சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளுக்கும்  போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

செய்தி நிறுவனமான ANI தனது ட்விட்டர் தனது பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், போலீஸ்  மற்றும் துணை ராணுவ வீரர்கள் செங்கோட்டை வளாகத்தில் 15 அடி சுவரிலிருந்து குதித்து  தப்பித்து ஓடுவதுபோல் வீடியோ அமைந்துள்ளது.இதில் போராட்டக்கார்கள் தங்கள் கையில் உள்ள கம்பை வைத்து தாக்குவது,டிராக்டரை கொண்டு தடுப்புகளை இடிப்பது போன்ற காட்சிகள் அமைந்துள்ளது.

நேற்று நடைபெற்ற வன்முறையில் 86 காவல்துறையினர் காயமுற்றதாகவும் இதில் 41 பேர் செங்கோட்டையில் நடந்த வன்முறையில் தாக்கப்பட்டதாக காவல்துறையின் மூத்த அதிகாரி அதெரிவித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து,அமைதியை மீட்டெடுப்பதற்கும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும் டெல்லியில் கூடுதலாக துணை ராணுவ வீரர்கள் நிறுத்தபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்