#viral: எங்கும் கண்டிராத அதிர்ச்சி காட்சிகள்..!ஹரியானாவில் நீருக்குள் மூழ்கியிருந்த நிலப்பகுதி தானாக மேலெழும்பியது!
ஹரியானாவில் நீருக்குள் மூழ்கியுள்ள நிலப்பகுதி தானாக மேலே எழும்பும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹரியானாவில் உள்ள ஒரு ஆற்றின் மேலே அங்குள்ள நிலத்தின் பகுதி மேலே உயர்ந்து வந்துள்ளது. இந்நிகழ்வு அப்பகுதியில் மழை பெய்த பிறகு நடந்துள்ளது. அப்போது அங்கிருந்த பார்வையாளர் ஒருவர் இதனை அவரது செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
வீடியோவில், நீருக்கடியில் மூழ்கிய நிலம் திடீரென தண்ணீருக்கு மேலே சில அடி உயர்ந்து அதன் ஒரு சில பகுதிகள் இடிந்து கீழே விழுவதை நாம் காண முடியும். இந்த வீடீயோவை பார்த்த பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த செயல்பாடு பூமியில் அடியில் உள்ள மீத்தேன் ஈரமான அடுக்கை ஒரு குமிழாக உருவாக்கி அதனை விடுவித்திருக்கலாம் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.
Strange thing happened these days, this is in India. on UP Haryana border near Panipat,,after heavy rains the part of the land rises from below the water bed formed due to rain pic.twitter.com/Cmzs2I78yl
— ????????????jaggirmRanbir???????????? (@jaggirm) July 24, 2021