அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய வருகையின்போது அவரின் மகள் இவாங்கா ட்ரம்ப் தன் கணவர் ஜாரெட்டுடன் வந்திருந்தார். அப்போது அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் முன்பு நின்று, இவாங்கா தன் கணவருடனும், தனியாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் இவாங்கா, தாஜ்மகாலில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இதையடுத்து நம்ம ஊரு இளைஞர்கள் இவாங்காவுடன் இருப்பது போன்று புகைப்படங்களை போட்டோஷாப் செய்து வெளியிட்டு வருகின்றனர். இந்த போட்டோஷாப் புகைப்படங்களை பார்த்த இவாங்கா உற்சாகமாகிவிட்டார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இவாங்கா, இந்தியர்களின் அன்பை வரவேற்று மகிழ்கிறேன் என்றும் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர் எனப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், பஞ்சாபி நடிகரும் பாடகருமான தில்ஜித், தனது ட்விட்டர் பக்கத்தில் இவாங்காவுடன் தாஜ்மகாலில் இருப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார். அதில் என் வாழ்க்கையில் இவாங்கா வந்தவுடன் அவரைநான் தாஜ்மகாலுக்கு அழைத்துச் சென்றேன் எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவை பார்த்த இவாங்கா, என்னை தாஜ்மகாலுக்கு அழைத்துச் சென்றதுக்கு நன்றி எனவும் இது மறக்க முடியாத ஒரு தருணம் என்றும் பதிவிட்டுள்ளார்.
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…