வன்முறையில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் முடக்கம்.! உத்தர பிரதேஷ் முதலமைச்சர் அதிரடி உத்தரவு.!
- உத்தரப்பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபடுவோரின் சொத்துக்களை முடக்க அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
- இதனிடையே லக்னோ மாவட்ட மேஜிஸ்திரேட் தலைமையில் 4பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லியில் நடந்த போராட்டங்களில் வன்முறை அதிகமாக காணப்பட்டது. இதனால் உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையில் மட்டும் 18 பேர் உயிரிழந்தனர். அதில் ஏராளமான பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், வன்முறையில் ஈடுபடுவோரை கண்டறிந்து அபராதத்தை வசூலிக்கவும், சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே லக்னோ மாவட்ட மேஜிஸ்திரேட் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வன்முறையாளர்களை கண்டறிந்து சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.