கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஆயுதம் எழுதிய நபர்களுடன் சுராசந்த்பூர் காவல்நிலைய தலைமை காவலர் சியாம்லால் பால் புகைப்படம் எடுத்து இருந்தார். அந்த புகைப்படம் உள்ளூரில் வைரலானது. இந்த புகைப்படம் வெளியானதை தொடர்ந்து சியாம்லால் மீது காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டார்.
மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி – ஃபரூக் அப்துல்லா அறிவிப்பு
சுராசந்த்பூர் காவல் கண்காணிப்பாளர் சிவானந்த் சர்வே, ஆயுதம் ஏந்திய நபர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் தலைமை காவலர் சியாம்லால் பால் மறுஅறிவிப்பு வரும் வரை பணியில் சேரக்கூடாது என்றும், சுராசந்த்பூரை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
குக்கி இன மக்கள் அதிகம் வசிக்கும் சுராசந்த்ப்பூரில் அந்த இனத்தை சேர்ந்த தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் அங்கு பூதாகரமாக பரவியது. இதனால் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த வன்முறையில் காவல்துறை கண்காணிப்பாளர் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உண்டானது. வன்முறையில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு படையினர் தடுக்க முற்பட்டனர்.
இந்த தாக்குதலில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் 25 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட முழுவதும் ஆயுதம் எழுதிய குற்றவாளிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், அதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் மாவட்டம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…