மணிப்பூரில் நீடிக்கும் வன்முறை – பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
மணிப்பூர் வன்முறை தொடர்பாக டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடி இன்று மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை.
மணிப்பூரில் மாநிலத்தில் நீடிக்கும் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த 2 மாதங்களாக மணிப்பூரில் நடந்துவரும் வன்முறையால் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்தும், அங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனிடையே, அமெரிக்காவிற்கு அரசு முறை பயண மேற்கொண்ட பிறகு இந்தியா திரும்பிள்ள பிரதமர் மோடியை, மணிப்பூர் கலவர விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.