பேரணியில் வன்முறை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை.!

டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டுள்ளது தொடர்ந்து அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார்.
டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்டதை அடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ளே நிலையில், விவசாயிகளின் பேரணியில் ஏற்பட்ட வன்முறையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது. இதனிடையே, பிப்.1-ஆம் தேதி நாடாளுமன்ற நோக்கிய பேரணி நடக்க இருப்பதாக விவசாய சங்கத்தினர் அறிவித்ததாக நேற்று தகவல் கூறப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டுள்ளது தொடர்ந்து அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் வன்முறை நிகழ்ந்தது தொடர்பாக காவல்துறையிடம் அறிக்கை கேட்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
February 26, 2025
விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
February 26, 2025