டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்.
குடியரசு தினத்தையொட்டி நேற்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இந்த டிராக்டர் பேரணி அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கி, டெல்லியில் நுழைந்ததால், விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசியது. இதனால் விவசாயிகளுக்கு, போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து வன்முறையாக வெடித்தது.
இதையடுத்து, டெல்லி செங்கோட்டையை முற்றிகையிட்ட விவசாயிகள், அங்குள்ள கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகளின் கொடி ஏற்றினர். பின்னர் வன்முறை தீவிரம் காரணமாக காவல்துறை தடியடி நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்த டெல்லியில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்தியது. மேலும் நேற்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை, பொதுச்சொத்து சேதப்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வன்முறைக்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…