மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்…!

Default Image
  • மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு பின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் பலாத்கார கொடுமைகள்.
  • மேற்கு வங்கத்தில் வாக்கெடுப்புக்கு பின் வன்முறையில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஒரு மாதத்திற்கு பின், அங்கு நடைபெற்ற தாக்குதல், பாலியல் பலாத்காரம் மற்றும் போலீசாரின் அக்கறையின்மை போன்ற பிரச்சனைகள் தொடர்பாக மேற்கு வங்க பெண்கள் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் உள்ள பெண்கள் ஆளும் கட்சியினரால் தேர்தல் வெற்றிக்குப் பின் வன்முறையில் அவர்கள் அனுபவித்த கொடூரமான கும்பல் பாலியல் பலாத்காரம்  விபரங்களை விவரித்து உயர் நீதிமன்றத்தில் நாடியுள்ளனர். பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்தும், காவல்துறையினரின் செயலற்ற தன்மை குறித்தும் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளனர்.

இது தொடர்பாக, 60 வயது மூதாட்டி அளித்த மனுவில் தனது பேரன் முன்பதாக  பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை விவரித்து கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் திரிணாமுல்  காங்கிரஸ் கட்சியினர் பலவந்தமாக தனது வீட்டிற்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப்பின் மே 4 மற்றும் 5 தேதிகளில் இந்த சம்பவம் நடந்தது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவரின் மதிப்பு மிக்க பொருட்களை கொள்ளையடித்த தாகவும் கூறியுள்ளார்.

மேலும் பூர்ணிமா மொண்டல் என்ற பெண் அளித்த மனுவில் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்த தனது கணவர் மே 14ம் தேதி பட்டப்பகலில் கோடாரியால் தாக்கப்பட்டார். மேலும் அந்த கும்பலில் இரண்டு பேர் தன்னையும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், தனது கணவர் மே 16 அன்று காலமானதாகவும் தெரிவித்தார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் பட்டியல் சாதி சமூகத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மே 9 அன்று காட்டில் இறந்து விட்டதாகவும், அடுத்த நாள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சேர்ந்த, பகதூர் என்பவர், போலீசில் புகார் அளித்தால் அவரது வீட்டை எரிப்பதாகவும், அவரது குடும்பத்தாரை கொலை செய்வதாகவும் மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் இரண்டு பாஜக தொழிலாளர்கள் கொல்லப்பட்ட வழக்குகள் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு மீது மேற்கு வங்க அரசாங்கத்தின் பதிலை உச்ச நீதிமன்றம் மே மாதம் கோரியிருந்தது.

மேலும், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை காரணமாக தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகக் கூறப்படும் மக்களை புகார்களைப் பெற்று உடனடியாக தங்கள் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கல்கத்தா உயர் நீதிமன்றம் ஜூன் 4 ம் தேதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் வாக்கெடுப்பு பின் நடைபெற்ற வன்முறை குறித்து மேற்கு வங்க அரசாங்கத்திடம் அறிக்கை அளிக்குமாறு கூறப்பட்ட நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த மாதத் தொடக்கத்தில் மாநிலத்தில் வாக்கெடுப்புக்கு பின் வன்முறையில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்