பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக வினோத் தாவ்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக வினோத் தாவ்டேவும், தேசியச் செயலாளர்களாக ரிதுராஜ் சின்ஹா, ஆஷா லக்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019 ஜூன் மாதம் தேவேந்திர ஃபட்னாவிஸ் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே. பின்னர் 2019 அக்டோபரில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில், இன்று பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக உள்ளார்.
தாவ்டே முன்பு கட்சியின் மகாராஷ்டிரா பிரிவின் பொதுச் செயலாளராகவும், மும்பையின் தலைவராகவும், அகில இந்திய தேசிய செயற்குழு உறுப்பினராகவும், 12 மற்றும் 13 வது மக்களவைத் தேர்தல்களுக்கான பாஜகவின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…