3 சொகுசு கார்கள்., சுமார் ரூ.3 கோடிக்கு சொத்துக்கள்.! வினேஷ் போகத் சொத்துப்பட்டியல் இதோ…

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ள வினேஷ் போகத் தாக்கல் செய்த வேட்புமனுவின்படி அவரது சொத்துமதிப்பு சுமார் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

Haryana Assembly Election Congress Candidate Vinesh Phogat

டெல்லி : சர்வதேச ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் குறிப்பிட்ட பிரிவின் கீழ் எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். உடன் மலியுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஹரியானவை சேர்ந்த வினேஷ் போகத், ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஜூலானா (Julana) தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக களமிறங்குகிறார். இவர் நேற்று தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் வினேஷின் சொத்து மதிப்பு தோராயமாக ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வினேஷ் போகத்தின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்ட தகவலின்படி, அவரின் ஆண்டு வருமானம் ரூ. 13 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வால்வோ (Volvo) XC 60 ரக கார், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார், 17 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா இன்னோவா என மூன்று கார்கள் வைத்துள்ளார், இதில் இன்னோவா கார் கடனில் ரூ.13.61 லட்சத்தை மாத தவணையாக திருப்பிச் செலுத்தி வருகிறார்.

அவரது அசையும் சொத்து மதிப்பு ரூ.1.10 கோடி என்றும், சோனிபட்டில் உள்ள வீடு உட்பட ரூ.1.85 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை வினேஷ் வைத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர, போகாட் ஆக்சிஸ், எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் கணக்கு வைத்துள்ள்ளார். அதில் மொத்தமாக சுமார் ரூ.40 லட்சம் இருப்பில் உள்ளது. 1.50 லட்சம் மதிப்பிலான பிரீமியத்துடன் கூடிய இன்சூரன்ஸ் வைத்துள்ளார். தன்னிடம் ரூ.1,95,000 ரொக்கப் பணம் இருப்பதாக போகத் கூறியுள்ளார்.

பிரமாணப் பத்திரத்தின்படி, போகட்டின் கணவர் சோம்வீர் ரதி, ரூ. 57.35 லட்சம் மதிப்பில் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை கொண்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது. ரூ. 19 லட்சம் மதிப்பிலான மஹிந்திரா ஸ்கார்பியோ காரை அவர் வைத்திருக்கிறார். வினேஷ் கணவரின் ஆண்டு வருமானம் 3.4 லட்சம். அவருக்கு இரண்டு வங்கிக் கணக்குகள் உள்ளன, மேலும் அவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். அவர் மொத்தம் ஆறு நிறுவனங்களில் ரூ.19 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்துள்ளார் என வினேஷ் போகத்தின் வேட்புமனுவில் சொத்துப்பட்டியல் படிவத்தில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்