“பி.டி.உஷா ஆதரவு அளிப்பது போல் நடித்தார்” வினேஷ் போகத் குற்றச்சாட்டு!

பி.டி.உஷா அனுமதி இல்லாமல் என்னுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டார் என வினேஷ் போகத் குற்றச்சாட்டியுள்ளார்.

vinesh phogat pt usha

டெல்லி : கடந்த ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் இறுதி போட்டி வரை சென்று 100 கிராம் எடை கூடியதால் பதக்கத்தை இழந்தார் வினேஷ் போகத். பதக்கத்தை இழந்தாலும், இந்திய மக்கள் மத்தியில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கான வரவேற்ப்பை அவர் பெற்றார்.

பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், எடைக் குறைப்புக்காகக் கடுமையாகப் பயிற்சி செய்த வினேஷ் போகத், நீர்சத்து குறைபாடு காரணமாக நீர்சத்து குறைபாடு காரணமாக , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்பொழுது, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் [IOA) தலைவரான பி.டி.உஷா, வினேஷ் போகத்தை மருத்துவமனையில் சந்தித்த புகைப்படம் வெளியானது.

இதுகுறித்து, தற்போது வினேஷ் போகத், “என் அனுமதியின்றி என்னுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்திய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் பி.டி.உஷா ‘உன்னுடன் உனக்கு ஆதரவாக நிற்கிறேன்’ என்றுகூட என்னிடம் சொல்லாமல், அந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

இங்கு எல்லாவற்றிலும் நிறைய அரசியல் கனியர் நடக்கிறது, ஆதரவு அளிப்பது போல் நடித்தார். பாரிஸிலும் அதுதான் நடந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வினேஷ் போகத் விளையாட்டில் இருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளார். வினேஷ் போகத், காங்கிரஸில் இணைந்தது மட்டும்மல்லாமல் ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜூலானா தொகுதியில் போட்டியிடுமகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nainar Nagendran BJP
BJP MLA Nainar Nagendran
Trisha Insta Story
Minister Ponmudi
DMK General Secretary Durai Murugan ,
Minister Ponmudi - DMK MP Trichy Siva