விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! ஒரு லட்டின் விலை 17 லட்சத்தையும் தண்டியது!
விநாயகர் சதுர்த்தி விழா அனைத்து பகுதிகளிலும் கோலாகமாக கொண்டாப்பட்டு நிறைவு பெற்று வருகின்றன. அனைத்து பகுதிகளிலும் வழிபாட்டிற்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதிராபாத்தில் 1994 முதல் விநாயகர் சதுர்த்தி விழாவில் வைக்கப்பட்ட லட்டுக்கள் ஏலம் விடப்படும். அப்படி சென்றாண்டு நடைபெற்ற ஏலத்தில் லட்டானது 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விலைபோனது.
இந்தாண்டு அந்த விலையை மிஞ்சும் வகையில் கோலன் ராம் ரெட்டி என்ற விவசாயி விநாயகர் சதுர்த்தி லட்டை 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இவ்வாறு அவர் ஏலம் எடுப்பது இது 9வது முறையாகும்.