தூக்கு தண்டனையை ரத்து செய்ய தன்னைத்ததானே காயப்படுத்திய வினய் ஷர்மா.!

Published by
Dinasuvadu desk
  • நிர்பயா குற்றவாளிகளுக்கு வருகின்ற மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.தூக்கு தண்டனையை ரத்து செய்ய குற்றவாளிகள் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.
  • கடந்த 16-ம் தேதி குற்றவாளி வினய் ஷர்மா சுவரில் தனது தலையை மோதி கொண்டு தன்னைத்ததானே காயப்படுத்தி கொண்டார்.

கடந்த  2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங், ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 1-ம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் குற்றவாளிகள் புதிய மனுக்கள் தாக்கல் செய்ததால் தூக்கு தண்டனையை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அவரது மனுவை ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

பின்னர்  வினய் ஷர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதையெடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தூக்கு தண்டனையை ரத்து செய்ய குற்றவாளிகள் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். அதில் திகார் சிறையில் இருக்கும் வினய் ஷர்மா கடந்த 16-ம் தேதி சுவரில் தனது தலையை மோதி கொண்டு காயத்தை ஏற்படுத்திக்கொண்டார். பின்னர் அவரை மீட்டு சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் இது போன்று குற்றவாளிகள் 4 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்பதற்காக அவர்கள் அறையில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

13 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

14 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

15 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

15 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

15 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

16 hours ago