தலித் சிறுமியை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்த கிராம மக்கள்
ஷாஜாபூரில் தலித் சிறுமியை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்த கிராம மக்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது தலித் சிறுமியை பள்ளிக்குச் செல்ல விடாமல் கிராம மக்கள் தடுத்துள்ளனர்.
பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது சிலர் தன்னை வழி மறித்து தனது பள்ளிப் பையை பறித்துக்கொண்டதாகவும், “கிராமத்தில் எந்தப் பெண்ணும் பள்ளிக்கு செல்ல அனுமதிக்காத நிலையில், உனக்கு எப்படி தைரியம் வந்தது?” என்று கூறியதாகவும் சிறுமி போலீசாரிடம் தெரிவித்தார்.
மேலும் தனது குடும்பத்தினரை கிராம மக்கள் தாக்கியதாகவும் சிறுமி கூறியுள்ளார்.