உத்தரபிரதேச மாநிலத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வந்ததால் கிராமவாசிகள் பலரும் ஓடும் சராயு நதியில் குதித்து தப்பியுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4000 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு தடுப்பூசி போடும் பணியை செயல்படுத்தி வருகிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வண்ணம் பல விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.
இதனால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாஜிஸ்திரேட் தலைமையில் மருத்துவக்குழு ஒன்று உத்தரப்பிரதேசத்தின் பாராபங்கி என்ற கிராமத்திற்கு சென்றுள்ளனர்.கொரோனா தடுப்பூசியை கண்டவுடன் அப்பகுதி மக்கள் ஓட்டமெடுத்து அங்கு ஓடும் சராயு நதியில் குதித்துள்ளனர். இது கொரோனா தடுப்பூசி இல்லை, இது ஒரு விஷ ஊசி என்பது போல் அங்கு வதந்தி பரவியதே இதற்கு காரணம். மேலும், அக்கிராமத்தில் 14 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் மற்றவர்கள் இதிலிருந்து தப்பி ஓடியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…