கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் வைத்து சுமந்து சென்ற கிராம மக்கள் – காரணம் என்ன தெரியுமா?
சட்டீஸ்கரில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை 5 கிலோ மீட்டர் வரை கிராம மக்கள் சுமந்து சென்று உள்ளனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜஸ்பூர் ஜாப்லா எனும் கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தையும், நகர் புறத்தையும் இணைப்பதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் அவசர தேவைகளுக்கு உடனடியாக வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணிக்கு ஏற்பட்ட பிரசவ வலியால் அங்கு சாலை வசதி இல்லாத நிலையில் ஆம்புலன்ஸ் வர இயலவில்லை.
எனவே ஒரு கட்டிலில் கர்ப்பிணி பெண்ணை படுக்க வைத்து ஐந்து கிலோமீட்டர் வரை கிராம மக்களை தூக்கி சென்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து கிராம வாசிகள் கூறுகையில், சரியான சாலை வசதிகள் இல்லாததால் நோயாளிகளை நாங்கள் சுமந்து தான் செல்ல வேண்டியுள்ளது. வாகனங்கள் எங்கள் கிராமத்திற்குள் நுழைய முடிவதில்லை, கடந்த காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன, இந்த சாலைகளை சரி செய்வதற்கு ஆண்டு இறுதிக்குள் அதிகாரிகள் உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.