கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 60 வழக்குகளில் தொடர்புடையவர் பிரபல ரவுடியான விகாஸ் துபே. உத்திர பிரதேச போலீசார் இவரை பிடிக்க சென்றபோது, 8 காவலர்களை சுட்டுகொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார். இதனால் போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், விகாஸ் துபேவை கைது செய்தனர். பின்னர் அவரை கான்பூர் கொண்டு செல்லும் வழியில் வாகனம் விபத்துக்குள்ளானதாகவும், அதனை பயன்படுத்தி, விகாஸ் துபே தப்பியோட முயன்றதாகவும், இதனால், விகாஸ் துபேவை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொண்டனர்.
பின்னர், அவரது மனைவி மற்றும் மகனை போலீசார் விசாரித்துவிட்டு வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். மூத்த மகன் ஆகாஷ் துபே பிரிட்டனில் மேற்படிப்பு படித்துவந்துள்ளார். அவர் தற்போது, ஊரடங்கு காரணமாக லக்னோவில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பாட்டி வீட்டில் தங்கி இருந்த விகாஸ் துபேயின் மகன் ஆகாஷ் துபேயிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மிகவும் பதட்டமாக காணப்பட்டாராம். தனது தாயை பற்றி மட்டுமே அதிகமாக போலீசாரிடம் கேட்டறிந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. போலீசார் கேட்ட கேள்விகளுக்கு ஆகாஷ் துபே மிகவும் பதட்டமாக இருந்ததால் சரிவர பதில் கூறவில்லை எனவும் கூறப்படுகிறது.
உத்திர பிரதேசத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த விகாஷ் துபே, பல்வேறு நகரங்களில் கோடிக்கணா மதிப்புள்ள சொத்துக்களை தனதுடமையாகியுள்ளார். நில அபகரிப்பு மூலமாக மட்டுமே வருடம் சுமார் 10 கோடி சம்பாதித்து வந்துள்ளாராம். மேலும், நில அபகரிப்புக்கு மட்டுமே சுமார் 100 அடியாட்களை விகாஸ் துபே வேலைக்கு வைத்திருந்தாராம்.
விகாஷ் துபே மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களின் பெயரில் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் சொத்துக்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…