கான்பூரில் ரவுடியாக வலம் வரும் விகாஷ் துபேவை கண்டுபிடிக்க காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் விகாஷ் துபே. இவர் மீது ஏகப்பட்ட கொலை உட்பட கொலை முயற்சி, கொலை வழக்குகள் என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பிடிக்க முயன்ற 8 போலீசாரை சுட்டு கொன்றுள்ளது விட்டு தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் அவுரியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஃபோர்ட் எகோஸ்போர்ட் கார் ஒன்று கண்டறியப்பட்டது. விகாஷ் துபேயின் பெயரில் இருந்த அந்த கார் வழியாக தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து நேபாள நாட்டுடான உத்திரப் பிரதேச எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
மேலும் விகாஷ் துபே, அவுரியா தேசிய நெடுஞ்சாலை வழியாக மத்திய பிரதேசத்திற்கு தப்பி செல்ல வாய்ப்பு உள்ளதாகவும், அல்லது பிந்த்-மொரேனா வழியாக ராஜஸ்தானிற்கு சென்றிருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து குவாலியர் மற்றும் பிந்த் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தியதோடு, சந்தேகமற்ற நபர்களையும் , வாகனங்களையும் சோதனை செய்தும் வருகின்றனர். அது மட்டுமின்றி உத்திரப் பிரதேசம் மற்றும் நேபாள எல்லையில் விகாஷ் துபேயின் புகைப்படத்தையும் சுவரொட்டியையும் ஒட்டியுள்ளனர்.மேலும் காரை போலீசாரை திசை திருப்ப விட்டு சென்றிருக்கலாம் என்றும் தடவவியல் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து விட்டு சென்ற காரிலிருந்து ரத்த கறையுடன் கூடிய கைக்குட்டை, மூன்று அடையாள அட்டைகள், பர்ஸ், எலைட் லக்னோ பள்ளியின் ஐடி கார்டு, விலை மதிப்புடைய காலணி ஆகியவை கைப்பற்றப்பட்டு, அதிலுள்ள கைரேகைகளை தடவவியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கார் ஆவுரியா – திபியாபூர் நெடுஞ்சாலை அருகே கண்டறியப்பட்டதாகவும், காரின் ஆவணங்களை சோதனை செய்த போது லக்னோவில் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. அந்த கேங்க்ஸ்டர் குறித்து உள்ளூர் மக்களிடையே விசாரணை நடத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள டவரை வைத்து செல்போன் எண்களை ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் 'பிஎஸ்எல்வி…
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…
சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…
சென்னை : GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…