உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிக்ரு கிராமத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபேவை கைது செய்ய சென்றபோது, அப்போது பதுங்கி இருந்த ரவுடிகள் போலீசார் மீது நடத்திய தாக்குதலில் டி.எஸ்.பி உள்ளிட்ட 8 போலீசார் கொல்லப்பட்டனா்.
இந்த சம்பவத்திற்கு பிறகு விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகளும் தலைமறைவாகினர். அந்தச் சம்பவத்தில் 21 போ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதைத் தொடா்ந்து, கடந்த 9-ஆம் தேதி தலைமறைவாக இருந்த விகாஸ்துபேவை மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனில் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்த விகாஸ்துபேவை கான்பூருக்கு போலீசார் அழைத்து வந்தபோது கடந்த 10-ஆம் தேதி அதிகாலை அவா்கள் வந்த வாகனம் கவிழ்ந்து. இதைப் பயன்படுத்தி விகாஸ் துபே போலீசாரின் துப்பாக்கியை எடுத்து கொண்டு தப்பிக்க முயற்சி செய்தபோது, போலீசார் அவரை சரண் அடையும்படி கூறியுள்ளனர்.
ஆனால், விகாஸ்துபே போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால், விகாஸ் துபேவை போலீசார் என்கவுண்டர் செய்தனர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் விகாஸ் துபே உள்ளிட்ட 6 போ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனா்.
இது குறித்து நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்த வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு விசாரரித்தது.
அப்போது, விகாஸ் துபே என்கவுன்ட்டா் குறித்து வியாழக்கிழமை (அதாவது இன்று ) அறிக்கை தாக்கல் செய்வதாக உத்தர பிரதேச அரசு சாா்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினாா். இதைத்தொடர்ந்து, இந்த மனுக்கள் மீதான விசாரணை வருகின்ற 20-ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
8 போலீசார் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் விகாஸ் துபே உள்ளிட்ட 6 போ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனா். 4 போ் கைது செய்யப்பட்டனா். 11 பேரை போலீசார் தேடி வருகின்றனா்.
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…