போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட விகாஸ் துபேயின் தந்தை கூறுகையில், இந்த மாதிரியான நபர் சுட்டுக்கொல்லப்பட்டது நல்லதுதான். இவனால், நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். என வேதனையுடன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 60 வழக்குகளில் தொடர்புடையவர் பிரபல ரவுடியான விகாஸ் துபே. உத்திர பிரதேச போலீசார் இவரை பிடிக்க சென்றபோது, 8 காவலர்களை சுட்டுகொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார். இதனால் போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், விகாஸ் துபேவை கைது செய்தனர். பின்னர் அவரை கான்பூர் கொண்டு செல்லும் வழியில் வாகனம் விபத்துக்குள்ளானதாகவும், அதனை பயன்படுத்தி, விகாஸ் துபே தப்பியோட முயன்றதாகவும், இதனால், விகாஸ் துபேவை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொண்டனர்.
இவரது இறுதி சடங்கில் மனைவி, மகன், மைத்துனர் மட்டுமே கலந்துகொண்டனர். தாய், தந்தை, உடன் பிறந்தோர் கலந்துகொள்ள வில்லை. விகாஸ் துபே குறித்து, அவரது தந்தை கூறுகையில், இந்த மாதிரியான நபர் சுட்டுக்கொல்லப்பட்டது நல்லதுதான். இவனால், நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். என வேதனையுடன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…