விகாஸ் துபே கொலை செய்ததை நியாயப்படுத்துவது நீதித்துறைக்கு புறம்பானது. அதே வேளையில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது என மத்தியப்பிரதேச (எம்.பி.) உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறினார்.
கான்பூரில் 8 போலீசாரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த விகாஸ் துபேவை மத்திய பிரதேச போலீசார் உஜ்ஜைனியில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விகாஸ் துபேவை போலீசார் கான்பூருக்கு அழைத்து வரப்பட்டபோது அவர்கள் வந்த கார் திடீரென கவிழ்ந்து விபத்து நடந்தது.
இந்த விபத்தை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்பி ஓட முயன்றார். அப்போது அவரை சரணடைய போலீசார் கூறினர். ஆனால், விகாஸ் துபே போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால், போலீசாரும் சுட்டனர், இந்த சம்பவத்தில் காயமடைந்த ரவுடி விகாஸ் துபேவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், மருத்துவமனையில் அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்தியப்பிரதேச (எம்.பி.) உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இந்த சம்பவம் குறித்து நேற்று கருத்து கூறுகையில், ரவுடி விகாஸ் துபே கொலை செய்ததை நியாயப்படுத்துவது நீதித்துறைக்கு புறம்பானது. அதே வேளையில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது என கூறினார்.
மேலும், காங்கிரஸ் கட்சி நேற்று (அதாவது நேற்று முன்தினம் ) அவரைப் போன்ற ஒரு பயங்கரமான குற்றவாளியை எவ்வாறு உயிருடன் பிடிக்க முடியும் என்று கேள்விகளை எழுப்பியது. ஒரு நாள் கழித்து, இன்று (அதாவது நேற்று) அதே கட்சி கேட்கிறது, அவர் ஏன் கொல்லப்பட்டார், ஏனெனில் அவரது மரணத்துடன் பல ரகசியங்கள் புதைக்கப்பட்டன. இது காங்கிரஸின் மனநிலையையும், அதன் சிந்தனை செயல்முறையையும் காட்டுகிறது என தெரிவித்தார்.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…