விகாஸ் துபே கைது செய்யப்பட்டாரா? அல்லது சரணடைந்தாரா?என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை ஆகிய வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபே ரவுடியை பிடிக்கச் சென்ற போலீசார் மீது ரவுடி கும்பல் ஆனது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில் ஒரு டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 8 போலீசார் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு காரணமான தலைமறைவாக இருந்த ரவுடி விகாஷ் துபே, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நகரில் நேற்று பிடிபட்டார். விகாஸ் துபேவை இன்று காலை போலீசார் காரில் அழைத்து வந்துள்ளனர்.
வரை காரில் அழைத்து வரும் போது மழையால் பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவ்விபத்தை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்பிக்க முயன்ற போது போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாகவும், துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ரவுடி விகாஸ் துபே மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘உண்மையில் கார் கவிழவில்லை. ரகசியங்கள் வெளியாகி ஆட்சி கவிழ்வதில் இருந்து உத்திர பிரதேச அரசு காக்கப்பட்டுள்ளது என்றும், விகாஸ் துபே கைது செய்யப்பட்டாரா அல்லது சரணடைந்தாரா என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்.’ என்றும் பதிவிட்டுள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…