தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியா முழுவதும் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் சினிமாவினை தொடர்ந்து, அரசியலிலும் களமிறங்கினார். 1998-ஆம் ஆண்டு பிஜேபியில் சேர்ந்தார். அங்கு மகளிரணி பொறுப்பை ஏற்று வந்தார். அதனை அடுத்து தள்ளி தெலுங்கானா எனும் கட்சியை தொடங்கினார்.
பின்னர் அந்த கட்சியை சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் இணைத்து கொண்டார். தெலுங்கானாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார்.
அதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த இவர், தற்போது காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பிஜேபியில் சேர்வதற்காக ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக பிஜேபி தேசிய செயலாளர் முரளிதரராவ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். வரும் அக்டோபர் 8ம் தேதி பிஜேபியில் சேர்ந்துவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் இந்தியா முழுவதும் தெரிந்த முகமாக இருப்பதால், வரும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர பேச்சாளராக பிஜேபி சார்பில் களமிறக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…
சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…