விஜய் மல்லையா,நீரவ் மோடி,மெகுல் ஆகியோரின் ரூ.19,000 கோடி சொத்துக்கள் பறிமுதல் – மத்திய அரசு!
விஜய் மல்லையா,நீரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரிடம் இருந்து இதுவரையில் ரூ.19,000 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
பஞ்சாப்,எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர்களான விஜய் மல்லையா,நிரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரை எப்படியாவது இந்தியா அழைத்து வர வேண்டும் என வங்கிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
19,000 கோடி ரூபாய் சொத்துக்கள்:
இந்நிலையில்,விஜய் மல்லையா,நீரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரிடம் இருந்து இதுவரையில் 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ரூ.22,585.83 கோடி கடன்:
இது தொடர்பாக,நாடாளுமன்றத்தில் நேற்று எம்பி ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது:”விஜய் மல்லையா,நீரவ் மோடி, மொகுல் சோக்ஸி மூவரும் பொதுத்துறை வங்கியில்,அவர்களின் நிறுவனங்கள் மூலம் ரூ.22,585.83 கோடி கடன் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட சொத்துக்கள்:
எனினும்,கடந்த மார்ச் 15 நிலவரப்படி,பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் (PMLA) ரூ.19,111.20 கோடி மதிப்பிலான சொத்துகளில், 15,113.91 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.மேலும் ரூ.335.06 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மத்திய அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன ” , என்று தெரிவித்துள்ளார்.
The Central government on Tuesday informed the Rajya Sabha that assets amounting Rs 19,111.20 crores relating to fugitives economic offenders Vijay Mallya, Nirav Modi and Mehul Choksi have been attached by March 15th this year.
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 22, 2022