விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து ரூ.9,371.17 கோடி பொதுத்துறை வங்கிகளுக்கு அமலாக்கத்துறை மாற்றியுள்ளது.
இந்தியாவில் உள்ள பல வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி விஜய் மல்லையா கடனை செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்தி அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இவரைப்போலவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி மோசடி செய்துவிட்டு குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் கடன் திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த வங்கி கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. தப்பியோடிய மூன்று பேரும் பொதுத்துறை வங்கிகளில் 22,586 கோடி மோசடி செய்துள்ளனர்.
வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி,மெகுல் சோக்சி ஆகியோருக்கு சொந்தமாக ரூ.9,371.17 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. அந்த சொத்துக்களை தற்போது பொதுத்துறை வங்கிகளுக்கு அமலாக்கத்துறை மாற்றியுள்ளது.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…