விஜய் மல்லையா குற்றவாளி என்ற தீர்ப்பு செல்லும்.. சீராய்வு மனு தள்ளுபடி.. உச்சநீதிமன்றம்.!

Default Image

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் இருந்து சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு அந்த பணத்தை செலுத்தாமல் மோசடிசெய்துவிட்டு லண்டனுக்கு தப்பி விட்டவர் விஜய் மல்லையா. இதையடுத்து, இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா மீது  சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். விஜய் மல்லையாவை நாடு கடத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி மகன் சித்தார்த், மகள்கள் தனியா, லியானா ஆகியோரின் வங்கிக் கணக்கிற்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை  பணப்பரிமாற்றம் செய்ததாக எஸ்.பி.ஐ வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

எஸ்.பி.ஐ வங்கி தாக்கல் செய்த மனுவில் பணப் பரிமாற்றம் செய்யக்கூடாது என ஏற்கனவே கர்நாடக உச்சநீதிமன்றம்  பிறப்பித்த ஒரு உத்தரவை மீறி மல்லையா பணப் பரிமாற்றம் செய்ததாக அதில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு மல்லையா குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மல்லையா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், நீதிமன்ற உத்தரவை மீறி பணப்பரிவர்த்தனை செய்ததால் விஜய் மல்லையா குற்றவாளி என அறிவித்த தீர்ப்பு செல்லும், மேலும், விஜய் மல்லையாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்