வங்கி மோசடி வழக்கில் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் கைது! சிபிஐ அதிரடி.!

Default Image

ஐசிஐசிஐ வங்கி மோசடி வழக்கில் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத், சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத், ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி வழக்கில் ஈடுபட்டதாகக் கூறி சிபிஐ கைது செய்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் ஆகியோர் ஏற்கனவே சிபிஐயால் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப்பிறகு தற்போது வேணுகோபால் தூத் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்.

2009 மற்றும் 2011 க்கு இடையில் வீடியோகான் நிறுவனத்திற்கு, ஐசிஐசிஐ வங்கி வழங்கிய கடன்களில் மோசடி மற்றும் முறைகேடுகள் இருப்பது தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்