வைரல் வீடியோ ..! உ.பி. போலீசார் குதிரைகள் இல்லாததால் அவர்கள் செய்யும் காரியத்தை பாருங்கள்..!
லக்னோவில் நெட்டிசன் வறுத்தெடுக்கும் அளவிற்கு ஒரு வைரல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. உத்தரபிரதேச காவல்துறையினர் கால்களுக்கு இடையில் தடியை வைத்து குதிரை போல ஓடும் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோ 16 விநாடிகளின் உள்ளது. பெரோசாபாத் மாவட்டத்தில் நவம்பர் 8-ம் தேதி அதாவது அயோத்தி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பு போலீசார் இந்த பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த பற்றி இன்ஸ்பெக்டர் ராம் இக்ஷா கூறினார், ”இந்த போலிப் பயிற்சி, கூட்ட நிர்வாகத்துடன் தொடர்புடையது. எங்களிடம் குதிரைகள் இல்லை என்பதால், நாங்கள் குதிரை மீது இருப்பதாக போலீசார் கருதிய பயிற்சியை நடத்தினோம் என கூறினார்.
This is part of an anti riot drill conducted by the @firozabadpolice yesterday . In anticipation of the #AyodhyaVerdict . Serious question – could anyone explain what’s going on ? What exactly is this drill ? pic.twitter.com/weXNM7OnrX
— Alok Pandey (@alok_pandey) November 8, 2019
சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு வேடிக்கையான சம்பவம் நடைபெற்றது.ஒரு என்கவுண்டரின் போது புல்லட் துப்பாக்கியில் சிக்கிக் கொண்டபோது காவல்துறையினர் “தைன், தைன்” என்று கூச்சலிடுவதைக் காண முடிந்தது.
இருப்பினும் பலர் இந்த பயிற்சியை கேலி செய்தனர். மேலும் பலர் அதை ஹாரி பாட்டரின் விளையாட்டோடு ஒப்பிட்டு கேலி செய்தனர்.