பெண்னை தரையில் இழுத்து அடித்து இரும்புக் கம்பியால் தாக்கிய அதிகாரி..வைரல் வீடியோ.!

Default Image

மாஸ்க் அணியுமாறு சொன்னதற்கு ஆத்திரமடைந்த அரசு அதிகாரி ஒருவர் ஆந்திராவில் ஒரு பெண் அதிகாரியை கொடூரமாக தாக்கிய சி.சி.டி.வி பதிவு வெளியாகியுள்ளது.

ஏபி சுற்றுலா ஹோட்டல் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவர் வேலை செய்து கொண்டிருக்கும்போது தலைமுடியால் ஒரு அதிகாரி வெளியே இருந்து வருகிறார் அப்போது பெண் ஊழியர் மாஸ்க் அணிய சொன்னதால் கோவமடைந்து தலமுடியை பிடித்து தரையில் இழுத்து அடித்து பின்னர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெண் ஊழியரை தலைமுடியால் இழுத்துச் சென்ற துணை மேலாளர் பாஸ்கர், அலுவலகத்தில் உள்ள மற்ற ஊழியர்கள் தடுக்கும்போது அதை மறுத்து அந்த பெண்ணை இழுத்துச் தரையில் அடித்து பலமுறை தாக்கினார். தாக்குதலை பார்க்கமுடியாமல் அலுவலகத்தில் இருந்த மற்றொரு பெண் வெளியே ஓடி ஒருவரை அழைத்து வந்து பாஸ்கரின் கைகளில் இருந்து கம்பியை வாங்கினர் .

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முகமூடியை அணியுமாறு பெண் அதிகாரி கேட்டதற்கு அடுத்து அந்த அதிகாரி கோபமடைந்ததாகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் போலீஸிடம் புகார் அளித்த பின்னர் போலீசார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்