தன்னை விட உயரமுடைய வேலியை எகிறி குதித்த மான்.! மிரள வைக்கும் வீடியோ.!
ஒடிசா மாநிலத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுசாந்தா நந்தா. இவர், தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று அனைவரையும் மிரள வைத்துள்ளது.
அந்த வீடியோவில், ஒரு வேலியின் மறுபுறம் நிற்கும் மான் ஒன்று தன்னை விட உயரம் அதிகமுள்ள வேலியை எகிறி குதிக்கிறது .அந்த வீடியோவை பகிர்ந்து மானின் அந்த அற்புதமான பாய்ச்சல் அதன் உயரம் மற்றும் வலிமையை கணக்கிடுவதாகவும், சில மான்கள் 8 அடி கூட குதிக்கின்றன.
ஆனால், சிவப்பு கங்காருக்கள் அனைத்து பாலூட்டிகளிலும் வேகமாக குதிப்பவர்கள். மணிக்கு 56 கிமீ வேகத்தில் குதிப்பதை கற்பனை செய்து பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Calculating the height & the strength required. And then that marvellous leap..
Some deer’s are known to jump 8 feet even. But red Kangaroos are the fastest jumpers among all mammals. Imagine jumping with speed up to 56 km/hr… pic.twitter.com/w9fhvrnJgr
— ACP (@Anantacharanpa4) October 28, 2020