காங்கிரஸின் வெற்றி டெல்லியில் இருந்தே தொடங்கும்… கார்கே நம்பிக்கை!

Mallikarjun Kharge

நாடாளுமன்ற் தேர்தலுக்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், மக்களை பிளவுபடுத்துவது மட்டுமே மத்திய பாஜக அரசின் பங்களிப்பாக இருக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது, இன்று 21 நாட்களாக சமூக நீதிக்கான உறுதியுடன் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் நடந்து வருகிறது.

முதலில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், தற்போது மணிப்பூர் முதல் மும்பை வரையிலும் ராகுல் மக்கள் பிரச்சனைகளை எழுப்பி வருகிறார். எந்தக் கட்சியிலும், இப்படிப்பட்ட நடவடிக்கையை, இயக்கத்தை எடுத்த தலைவர் இல்லை. மோடி இந்த நாட்டு மக்களை மீண்டும் அடிமைப்படுத்த விரும்புகிறார். இதனால் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

நம்பிக்கை வாக்கெடுப்பு – ஹேமந்த் சோரனுக்கு அனுமதி!

இன்றைய பிரதமர் தனது கருத்துக்களை இந்த நாட்டின் மீது திணிக்க நினைக்கிறார். டெல்லியில் இன்று நீங்கள் பார்க்கும் சாலைகள், மேம்பாலங்கள், மைதானங்கள், மெட்ரோ, பசுமை உள்ளிட்ட இவை அனைத்தும் காங்கிரஸின் பங்களிப்பு. ஷீலா தீட்சித் அவர்கள், டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மற்றும் சோனியா காந்தி அவர்களின் உதவியுடன் உள்கட்டமைப்புகளை உருவாக்கவில்லை என்றால், டெல்லி எப்படி இருந்திருக்கும்?.

நாங்கள் ஏழைகளுக்காக மட்டுமே போராடுகிறோம். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் பங்களிப்பு என்ன? மக்களை பிளவுபடுத்துவது மட்டுமே அவரது பங்களிப்பாக இருக்கிறது. காங்கிரஸ் தொண்டர்கள் முழு பலத்துடன், முழு அர்ப்பணிப்புடன் வாக்குச்சாவடியில் பணியாற்ற வேண்டும். உழைக்கும் மக்களை வாக்குச்சாவடியில் உட்கார வைக்க வேண்டும். பயமின்றி வெற்றிக்காக போராட வேண்டும்.

அனைவரும் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் வெற்றி பெற வீடு வீடாக செல்ல வேண்டும். காங்கிரஸின் வெற்றி டெல்லியில் இருந்தே தொடங்கும். அப்போதுதான் இந்த நாட்டில் ஜனநாயகமும் அரசியலமைப்பும் நிலைத்திருக்கும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்