பிரதமர் நரேந்திர மோடி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க 36 இடங்கள் போதும் என்ற நிலையில், தற்போது நிலவரப்படி 70 தொகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிகாரபூர்வமாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 70 தொகுதிகளில் 46 தொகுதிகளுக்கு அதிகாரபூர்வமாக தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் .அவரது பதிவில்,டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்கள்.மேலும் டெல்லி மக்களின் தேவைகளை நிறைவேற்ற வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…