துணை ஜனாதிபதி தேர்தல் : பாஜக வேட்பாளருக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி ஆதரவு.!
பகுஜன் சமாஜ்வாடி தலைவர் மாயாவதி , நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக ஆதரவுடன் களமிறங்கும் ஜகதீப் தங்கருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் தான் நம் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அதில் வழக்கம் போல, ஆளும் பாஜக ஆதரவு பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றிபெற்றார்.
அதன் பின்னர், தற்போது துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெ ற உள்ளது. அதில், பாஜக சார்பில் ஜகதீப் தங்கர் துணை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகிறார். இவர் மேற்கு வங்க முன்னாள் கவர்னர் ஆவர்.
இவருக்கு உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ்வாடி தலைவருமான மாயாவதி , வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக ஆதரவுடன் களமிறங்கும் ஜகதீப் தங்கர் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலிலும் திரௌபதி முர்முவுக்கு தான் ஆதரவு அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.