குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல்: சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில், சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 788 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
மாலை 5 மணிக்கு தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.