கடும் குளிர்! டெல்லியில் ஜனவரி 17 முதல் மஞ்சள் எச்சரிக்கை.!
கடும் குளிர் நிலவி வருவதால் டெல்லியில் ஜனவரி 17 முதல் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தற்போது கடுமையான குளிர் வாட்டி வருகிறது, மேலும் இந்த குளிர்கால வெப்பநிலை 4 டிகிரி வரை குறையக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நகரின் பல இடங்களும் குளிர் அலையை எதிர்கொள்ளநேரிடும் என்று கூறியுள்ளது.
இந்த குளிர்கால வெப்பநிலையால், டெல்லியில் ஜனவரி 17 முதல் ஜனவரி 19 வரை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியின் பல இடங்களில் அடர்ந்த மூடுபனி நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் அனைவரும் சூடான இடங்களில் பாதுகாப்புடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.