பஞ்சாபில் துணிகரம்.! போதைப்பொருள் கொடுத்து வாலிபரை கற்பழித்த 4 பெண்கள்.!
பஞ்சாபில் போதை பொருள் கொடுத்து கடத்தப்பட்ட நபர் 4 பெண்களால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தரைச் சேர்ந்த நபர் ஒருவர், தனக்கு 4 பெண்கள் போதைப்பொருள் கொடுத்து கடத்தப்பட்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியுள்ளார். கடந்தத் திங்கள்கிழமை அன்று தோல் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட நபர் ஜலந்தரின் கபுர்தலா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது வெள்ளை நிற காரில் வந்த நான்கு பெண்கள் அவரைத் தடுத்து நிறுத்தி முகவரி ஒன்றை விசாரித்தனர். அந்த முகவரியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் கண்களில் எதையோ தெளித்தனர். இதனால் அவர் சுயநினைவை இழந்துள்ளார்.
பின்னர், கண்ணை மூடி கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அந்த நபர் காரில் இருந்ததாவும் கற்பழிக்கப்படுவதற்கு முன்பு போதைப்பொருள் கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் இரவு நேரத்தில் காட்டுப் பகுதியில் வீசப்பட்டதாகவும் கூறியுள்ளார். தனது மனைவி கூறியதன் பேரில் போலீசில் அந்த நபர் புகார் அளிக்கவில்லை. இந்த செய்தியை அறிந்த போலீசார் தானாக இந்த சம்பவத்தைத் புகாராக பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர்கள் பஞ்சாப் காவல்துறையினர் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதன் பின்னர் தான் பாதிக்கப்பட்டவர் சார்பாக புகார் அளக்கப்பட்டுள்ளது.