“Bye daddy.. Bye” வென்டிலேட்டர் அகற்றம்! “என்னால் மூச்சுவிட முடியவில்லை” உயிரிழந்த மகனின் கடைசி வார்த்தைகள்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் கடைசி நிமிட வீடியோ ஒன்று, தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் குறிப்பாக, அவர் கூறிய “Bye daddy.. Bye” என்ற வார்த்தை, காண்போரின் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.48 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த 34 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, எர்ராகடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 24 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் 26 ஆம் தேதி கொரோனா தோற்றால் உயிரிழந்தார். மேலும் அவர் உயிரிழப்பதற்கு முன், அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் “பாய் டாடி பாய் (Bye daddy bye)” என்ற வார்த்தை, காண்போரின் கண்களை கலங்கவைக்கிறது.
#Hyderabad: “Can’t breathe, they removed the ventilator, bye daddy,bye everyone”. Covid patient dies at a Hyderabad hospital as hospital pulls off ventilator, shares last video pic.twitter.com/uGDOYhs32Y
— Mojo Story (@themojo_in) June 29, 2020
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “என் வென்டிலேட்டரை விட்டு எடுக்கும்போது, “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்று சொன்னபோதும் மருத்துவமனை ஊழியர்கள் அதை அகற்றினர். அப்பா 3 மணிநேரமாக நான் மூச்சுவிட ரொம்ப கஷ்டப்படுகிறேன். என் இதயம் நின்றுவிட்டதாக உணர்கிறேன். என்னால் இதற்க்கு மேல் சுவாசிக்க முடியவில்லை. நான் இறக்கப்போகிறேன் அப்பா, பாய் டாடி பாய்” என கூறிய சில மணிநேரத்தில் அவர் உயிரிழந்தார்.